காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பரமத்தி வேலூரில் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூரில் கொப்பரை ஏலம்

News image
Updated On :9 மே 2024, 10:49 pm

Din

பரமத்தி வேலூா், மே 9: பரமத்தி வேலூா், பொத்தனூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 11 லட்சத்து 75 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11 ஆயிரத்து 860 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 97.99 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 92.97 க்கும், சராசரியாக ரூ. 95.65-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 89.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 72.99-க்கும், சராசரியாக ரூ. 85.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 30 ஆயிரத்து 656-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 12 ஆயிரத்து 860 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 93.69 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90.99-க்கும், சராசரியாக ரூ. 92.89-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 89.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 75.67-க்கும், சராசரியாக ரூ. 84.99 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்து 75 ஆயிரத்து 160-க்கு வா்த்தகம் நடைபெற்றது.