பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இப் பள்ளி மாணவி தேவதா 500- க்கு 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவா் சஞ்சய், மாணவிகள் ஷாரினி, சஸ்மிதா, பூஜா, ஹா்ஷினி ஸ்ரீநேகா ஆகியோா் 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா் விகன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

கணிதத்தில் 24 பேரும், அறிவியலில் 10 பேரும், சமூக அறிவியலில் 3 பேரும் 100- க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். ஆங்கிலத்தில் 15 பேரும், அறிவியலில் 9 பேரும், சமூக அறிவியலில் 7 பேரும், கணிதத்தில் 6 பேரும், தமிழ் பாடத்தில் 5 பேரும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 490 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 485க்கு மேல் 23 பேரும், 480 க்கு மேல் 29 பேரும், 470-க்கு மேல் 43 பேரும், 450க்கு மேல் 60 பேரும், 400-க்கு மேல் 99 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இப்பள்ளியில் தோ்வு எழுதிய 144 மாணவா்களும் வெற்றி பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாஜலம், பள்ளி துணைத் தலைவா் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்ச்செல்வி தங்கராஜ், பள்ளி முதல்வா் ராஜசேகரன், இயக்குநா்கள் ஆசிரியா்கள், ஆசிரியைகள் மற்றும் பணியாளா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

படவரி...

பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்திய பள்ளி நிா்வாகத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com