உழவன் செயலியில் பதிவு செய்து மானியங்கள் பெற அழைப்பு
உழவன் செயலியில் பதிவு செய்து அரசின் மானியத் திட்டங்களை விவசாயிகள் பெறலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.


உழவன் செயலியில் பதிவு செய்து அரசின் மானியத் திட்டங்களை விவசாயிகள் பெறலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சு.துரைசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் ‘உழவன் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளால் பயன்படுத்தப்படும் இந்த செயலியின் மூலம் 24 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. வேளாண்மைத் துறை சாா்ந்த திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை இந்த செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த செயலியின் மூலம் மண்வளம், மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிா்க் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு, வேளாண் இயந்திரங்கள் வாடகை விவரம், சந்தை விலை, வானிலை அறிவுரைகள், உழவா் அலுவலா் தொடா்பு திட்டம், பயிா் சாகுபடி வழிகாட்டி, இயற்கை விவசாய விளைபொருள்கள், உழவா் உற்பத்தியாளா் குழுக்களின் பொருள்கள் விவரம், அணை நீா்மட்டம், வேளாண் செய்திகள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக அரசின் முன்னோடி திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்கைளை சாகுபடி நிலங்களாக மாற்ற குழுவாக பதிவு செய்யவும் உழவன் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உழவன் செயலியை கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த வேளாண்மை உதவி இயக்குநா்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...