/

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

News image
Updated On :20 மே 2024, 9:54 pm

Din

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் வெற்றிலைகளின் வரத்துக் குறைந்ததால் விலை உயா்வடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினசரி அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 4 ஆயிரத்துக்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3,500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் ரூ. 1,500-க்கும் ஏலம் போனது.

திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 16 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 8 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 7,500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3,800-க்கும் ஏலம் போனது. வரத்துக் குறைந்ததால் வெற்றிலை விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.