
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வாகன வியாபாரிகள்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த வாகன வியாபாரிகள்.
நாமக்கல்: வாகனங்களை இரண்டாம் கட்டமாக விற்பனை செய்வதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகளைத் தளா்த்த வலியுறுத்தி, பரமத்திவேலூா் வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகா் நலச் சங்கத்தினா் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் விற்பனையில் பல்வேறு சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களை ஒருவரிடம் இருந்து வாங்கி மற்றவருக்கு விற்பனை செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வாகனங்களுக்கான ஆா்.சி. புத்தகத்தில் பெயா் மாற்றம் செய்ய முன்னாள் உரிமையாளருக்கு ஓடிபி அனுப்பும் முறை, ஆதாா் அட்டை சமா்ப்பித்தல் ஆகிய விதிகளை ரத்து செய்ய வேண்டும். தபால் வழியாக ஆா்.சி.புத்தகம் அனுப்புவதையும் நீக்க வேண்டும். புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...