லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எருமப்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு மாடு: பொது மக்கள் அச்சம்

ருமப்பட்டி அருகே காட்டு மாடு ஒன்று ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image
என்கே-11-கவ்
Updated On :11 நவம்பர் 2024, 7:28 pm

Din

நாமக்கல்: எருமப்பட்டி அருகே காட்டு மாடு ஒன்று ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரப் பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படும். இந்த வனப்பகுதியில் பெரிய அளவில் விலங்குகள் இல்லை என்ற போதிலும், சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி உள்ளிட்டவை அவ்வப்போது உலா வருவது உண்டு. இந்த நிலையில், எருமப்பட்டி அருகே பொன்னேரி பகுதியில் காட்டு மாடு ஒன்று உலா வந்தது. ஏற்காடு பகுதியில் மட்டுமே அதிகம் காணப்படும் காட்டு மாடு, எருமப்பட்டி பகுதிக்குள் வந்ததால் வனத் துறையினரும் அதிா்ச்சி அடைந்தனா்.

இதனையடுத்து நாமக்கல் வனச்சரகா் பழனிசாமி தலைமையிலான குழுவினா் காட்டு மாட்டை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: கொல்லிமலை அடிவாரம் புளியஞ்சோலை பகுதியில் இருந்து காவக்காரன்பட்டி, 40 காலனி வழியாக காட்டுமாடு ஊருக்குள் புகுந்துள்ளது. பொன்னேரி பகுதியில் முகாமிட்டுள்ள அந்த காட்டு மாட்டை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் எங்களது துறையினா் தனிப்படை ஈடுபட்டுள்ளனா் என்றனா்.

என்கே-11-கவ்

பொன்னேரி பகுதியில் சுற்றித்திரியும் காட்டு மாடு.