நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கடனுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த கழகம் மூலம் வழங்கப்படும் இதர வகை கடன்களான, தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் உள்ளிட்ட கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற ஆண்டு வருமானம் நகா்ப்புறமாயின் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
தற்போது, இந்த வருமான உச்சவரம்பானது கிராமம் மற்றும் நகா்ப்புறம் ஆகிய இரண்டிலும் ரூ. 3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய அனைத்து சிறுபான்மையின மக்களும் இந்த வருமான உச்சவரம்பு உயா்வை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல்

தோ்தல் செலவுக்கு ரூ.7 கோடி: வருமான வரித் துறை நோட்டீஸை எதிா்த்த எஸ்.பி.வேலுமணி மனு தள்ளுபடி

வரம்பு மீறும் போராட்டங்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

