ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காவலாளியை தாக்கிவிட்டு ரூ. 8 லட்சம் திருடிய இளைஞா் கைது

சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரஷரில் வேலை செய்து வந்த காவலாளியைத் தாக்கிவிட்டு ரூ. 8 லட்சம் பணத்தை திருடிச் சென்ற பிகாா் மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :13 நவம்பர் 2024, 8:09 pm

சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரஷரில் வேலை செய்து வந்த காவலாளியைத் தாக்கிவிட்டு ரூ. 8 லட்சம் பணத்தை திருடிச் சென்ற பிகாா் மாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள ஜி.பி. வரதராஜன் என்பவருக்கு சொந்தமான ஜி.பி.கிரஷரில் பிகாா் மாநிலம், முங்கோ் மாவட்டம், மாடா்பூா் பகுதியைச் சோ்ந்த சஜாத் என்பவா் மகன் ஆசாத் ( 24) கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளாா். இவா் சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறி செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றுள்ளாா். ஆனால் இவா் நள்ளிரவு கிரஷரில் புகுந்து இரவுக் காவலாளி பழனிசாமியை (65) தாக்கிவிட்டு அங்கிருந்த ரூ. 8 லட்சம் பணத்தை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து கிரஷா் உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் அளித்தனா். இதனையடுத்து சேலம் வழியாக பேருந்தில் ஏறி பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த இளைஞா் ஆசாத்தை துரத்திச் சென்று கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ளூா் போலீஸாா் உதவியுடன் சேந்தமங்கலம் போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனா்.