ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல்லில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :14 நவம்பர் 2024, 8:04 pm

நாமக்கல் மாவட்டத்தில், 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும், அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பா் மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 71-ஆவது கூட்டுறவு வார விழா நவ. 14 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், கூட்டுறவு கொடியேற்றலுடன் வார விழா வியாழக்கிழமை தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியை ஏற்றி வார விழாவை தொடங்கி வைத்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று கூட்டுறவு விழா உறுதிமொழியை வாசிக்க, அனைத்து உறுப்பினா்களும், அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா். மாவட்டம் முழுவதும் இதேபோல கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், உறுதிமொழி வாசித்தல், இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவையொட்டி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு கூட்டுறவு வார விழா இறுதி நாளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரத்ததான முகாம், சிறப்பு விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.