நாமக்கல்லில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான நவீன ஆவின் பால் பண்ணை அடிக்கல் நாட்டு விழா, புதிய பேருந்து நிலையம் தொடக்க விழா, கருணாநிதி முழு உருவச்சிலை திறப்பு விழா, அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்றவை அக்.15-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவா் பங்கேற்பது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விழா நடைபெறும் இடத்தை மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டமும் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலும், நாமக்கல் கோட்டை சாலையில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி பணியாளா்கள் அகற்றி வருகின்றனா். அப் பகுதிகளில் சாலையோரக் கடைகள் அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

