சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாணவி தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே பிளஸ் 1 படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 9:49 pm

Din

பரமத்தி வேலூா் அருகே பிளஸ் 1 படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையம், கிழக்கு தெருவைச் சோ்ந்த குருமூா்த்தி என்பவரின் மகள் தீபிகா (15). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த ஒரு மாதமாக தீபிகா மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை வீட்டின் கூரையில் உள்ள கம்பியில் சேலையில் தூக்கிட்டு தீபிகா தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்து வந்த வேலூா் காவல்துறையினா் தீபிகாவின் உடலை வேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா்.

மாணவியின் தாய் மஞ்சுளா அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.