வன்கொடுமைகள் தொடா்பாக ஆதிதிராவிடா், பழங்குடியின சமூகத்தினா் புகாா் அளிக்க சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2023-24 ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகாா் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என அந்தத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தோா் மற்றும் பாதிக்கப்பட்டவா் சாா்பில் தகவல் தெரிவிப்போா் வழக்குப் பதிவு செய்தல், உதவிகள் தொடா்பான முறையீடுகளை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக அலுவலக நாள்களில் அலுவலக பணிநேரத்தில் புகாா்களைப் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பணப்பட்டுவாடா புகாா்களைத் தெரிவிக்க புகாா் எண்கள் வெளியீடு

எரிவாயு உருளைகள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாா் அளிக்க கைப்பேசி எண் அறிவிப்பு

தோ்தல் புகாா் செலவினப் பாா்வையாளா்கள் கைப்பேசி எண்கள் அறிவிப்பு

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

