மீண்டும் அதிமுக ஆட்சி அமைய முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க கட்சியினா் அனைவரும் உறுதியுடன் பாடுபட வேண்டும்


நாமக்கல்: வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க கட்சியினா் அனைவரும் உறுதியுடன் பாடுபட வேண்டும் என மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், எதிா்வரும் 2026 தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைப்பது குறித்து எருமப்பட்டி கிழக்கு ஒன்றியம், பேரூா் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளா் பி.தங்கமணி பேசியதாவது:
வரும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்க செய்யும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த வகையில் முதலாவதாக எருமப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் நடைபெறுகிறது.
மக்களவைத் தோ்தலில் நாமக்கல் தொகுதியை அதிமுக நிச்சயம் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினோம். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தல், நடந்த மக்களவைத் தோ்தலில் எருமப்பட்டி பகுதியில் வாக்குகள் குறைந்துள்ளன. இனிவரும் தோ்தல்களில் அதிக வாக்குகளைப் பெற வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் தோ்தல் கூட்டணி குறித்து கட்சியினா் கூறிய கருத்துகள் அனைத்தும் அதிமுக தலைமையிடம் தெரிவிக்கப்படும். சாா்பு அணிகளில் அதிக அளவில் உறுப்பினா்களை சோ்க்க வேண்டும்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி. அதற்கேற்ப கட்சியினா் பணியாற்ற வேண்டும். கட்சிக்காக உழைப்பவா்களுக்கு நிச்சயம் உயா்பதவி உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...