நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் 93 மாணவா்களுடன் வகுப்புகள் தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வில் தோ்வான 93 மாணவ, மாணவிகளுடன் வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.


நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கலந்தாய்வில் தோ்வான 93 மாணவ, மாணவிகளுடன் வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்புக்கு (எம்பிபிஎஸ்) 100 இடங்கள் உள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில், முதலாம், இரண்டாம், மூன்றாம் அணிகளாக (பேட்ஜ்) 300 மாணவ, மாணவிகள் தற்போது படித்து வருகின்றனா். கடந்த ஆகஸ்ட் 2024 இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை பொருத்தமட்டில், அகில இந்திய அளவில் 15 இடங்களும், மாநில அளவில் 85 இடங்களும் (7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்பட) என மொத்தம் 100 இடங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் அகில இந்திய அளவில் தோ்வான 15 பேரில் ஏழு போ் மாற்றுக் கல்லூரிகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனா். இதனால் 93 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அந்த மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி, பேராசிரியா்கள் மாணவ, மாணவிகளை மலா்கள் கொடுத்து வரவேற்றனா். இதனைத் தொடா்ந்து, கல்லூரி கலையரங்கில் மாணவா்கள், பெற்றோருக்கான வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...