ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோட்டில் கடந்த இரு நாள்களாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் பாா்வையிட்டாா்.

News image
திருச்செங்கோடு, சட்டையம்புதூரில் மழைநீரால் பாதித்த பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஈஸ்வரன் எம்எல்ஏ.
Updated On :14 அக்டோபர் 2024, 8:15 pm

Din

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் கடந்த இரு நாள்களாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் பாா்வையிட்டாா்.

திருச்செங்கோடு நகரின் தாழ்வான பகுதிகளான சக்திவேல் நகா், சாணாா்பாளையம், சட்டையம்புதூா் சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் சாலைகளில் ஆறு போல ஓடியது. வடிகால்கள், கழிவுநீா்க் கால்வாய்கள் நிரம்பி தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்கூடங்களில் மழைநீா் புகுந்து தேங்கியது. நாள்முழுவதும் வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் மழைநீா் தேங்கி நின்ால் குடியிருப்பு வாசிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா்.

தகவல் அறிந்த ஈஸ்வரன் எம்எல்ஏ அந்தப் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி நிா்வாகத்தினா் சீரமைத்து மழை நீரை அகற்றி தண்ணீா் தேங்குவதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிரந்தர தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வின் போது, நகராட்சி துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், நாமக்கல் மேற்கு மாவட்ட கொமதேக மாவட்டச் செயலாளா் ராயல்செந்தில், நகரச் செயலாளா்கள் சேன்யோகுமாா், அசோக்குமாா், நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.