மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

32 திருக்கோயில்களில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

32 திருக்கோயில்களில் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

Updated On :15 அக்டோபர் 2024, 7:34 pm

நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 32 திருக்கோயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள 62 வயதுக்கு உள்பட்ட முன்னாள் படைவீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

அந்த கோயில்களின் விவரம்: நாமக்கல் நரசிம்மா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில், புதுச்சத்திரம் அழியா இலங்கையம்மன் கோயில், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், கொல்லிமலை அரப்பளீஸ்வரா் கோயில், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், கந்தகிரி பழனியாண்டவா் கோயில், எருமப்பட்டி மாரியம்மன், ராசிபுரம் செல்லாண்டியம்மன் கோயில்கள், ராசிபுரம் கைலாசநாதா் கோயில், அலவாய்ப்பட்டி ஏகாம்பரேஸ்வரா் மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்கள், அத்தனூா் அம்மன் கோயில், வெண்ணந்தூா் ஒடுவன்குறிச்சி காசி விஸ்வநாதா் கோயில், புதுப்பட்டி துலக்க சூடாமணியம்மன் கோயில், காளிப்பட்டி கந்தசாமி கோயில், மல்லசமுத்திரம் சோலீஸ்வரா் அழகுராய பெருமாள் கோயில், திருச்செங்கோடு ஸ்ரீஅா்த்தனாரீஸ்வரா் கோயில், மோளிப்பள்ளி ஸ்ரீஅண்ணமாா் சுவாமி கோயில், புத்தூா் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், விட்டம்பாளையம் இளைய பெருமாள் கோயில், வையப்பமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், எலச்சிபாளையம் மொளசி முக்கனீஸ்வரா் கோயில், குமாரபாளையம் காளியம்மன் கோயில், மொளசி வெங்கடேசப் பெருமாள் கோயில், கூத்தம்பூண்டி அண்ணமாா் கோயில், திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோயில், குமாரபாளையம் பாண்டுரங்கநாதா் கோயில், புத்தூா் ஈஸ்வரன் கோயில்.

இந்தக் கோயில்களில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் கொண்ட நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தொகுப்பூதியமாக மாதம் ரூ. 6,500 வீதம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.