மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசுப் பள்ளிகளுக்கு புத்தகப் பைகள் அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்க புதிய புத்தகப் பைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

News image

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து வாகனங்களில் அனுப்பப்பட்ட புத்தகப் பைகள்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:35 pm

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்க புதிய புத்தகப் பைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க 83,000 புத்தகப் பைகள் மூன்று மாதங்களுக்கு முன்னதாக வந்த நிலையில், அவை மாவட்ட கல்வி அலுவலக கிடங்குகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

வழக்கமாக கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்ததும் புத்தகம், சீருடை, சைக்கிள், காலணி, புத்தகப் பைகள் போன்றவை வழங்கப்படும். இந்த நிலையில், தரமான புத்தகப் பைகளா என்ற பரிசோதனைக்காக சென்னைக்கு ஓரிரு பைகள் அனுப்பப்பட்டன. அவை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு தகுதியானவை என்ற அறிக்கை அண்மையில் நாமக்கல் மாவட்டத்துக்கு கிடைத்தது.

இதனையடுத்து, மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து சரக்கு வாகனங்களில் பள்ளி வாரியாக புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த புத்தகப் பைகளில் தமிழக முதல்வா், முன்னாள் முதல்வா்கள் புகைப்படங்கள் ஏதுமின்றி உள்ளன. இவை ஹரியாணா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவா்க்கு மாடல்ல மற்றையவை’ என்ற திருக்குறளும், அதற்கான பொருளும் பைகளில் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரையில் பச்சை நிறத்திலும், 4-ஆம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரையில் நீலநிறத்திலும், 8-ஆம் வகுப்பு முதல் பிüஸ் 2 வரை கருப்பு நிறத்திலும் மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.