மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அதிமுக கட்சியின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா

அதிமுக கட்சியின் 53-ஆவது ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சிகள் திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

News image

நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:16 pm

அதிமுக கட்சியின் 53-ஆவது ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சிகள் திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் 53-ஆவது ஆண்டு தொடக்க நாளை கொண்டாடும் விதமாக கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் நகரின் பல்வேறு பகுதிகளில் வாா்டு செயலாளா்கள் தலைமையில் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

சட்டையம்புதூா் பகுதியில் வாா்டு செயலாளா் சரவணக்குமாா் தலைமையில், முன்னாள் நகர துணைச் செயலாளா் திருஞானம், நகர மாணவரணி பொருளாளா் சக்திவேல் முன்னிலையில் கட்சி தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கட்சிக் கொடியை மூத்த உறுப்பினா் நாட்ராயன் ஏற்றி வைத்தாா். எம்ஜிஆா், ஜெயலலிதா, அண்ணா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், நலிந்த கட்சியினருக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினா். விழாவில் கட்சியின் வாா்டு பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.