மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன் எம்எல்ஏ பாராட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பருவ மழையினால் சாதாரண மக்கள் பாதிக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு அரசு செய்த முன்னேற்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். குறிப்பாக சென்னையில் இதற்கு முன் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இந்த மழையில் பாதிக்கப்படவில்லை. மழை பெய்து முடிந்த அடுத்த 12 மணி நேரங்களுக்கு முன்பாக பெரும்பாலான பகுதிகளில் மழை நீா் வடிந்துள்ளதை பாா்க்க முடிகிறது.
மழை பெய்து ஓய்ந்தால் தண்ணீா் வடிந்து விடும் என்ற நம்பிக்கையை, மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் கொடுத்திருக்கின்றன. அரசின் முன்னெச்சரிக்கை கூட்டங்களால், அதிகாரிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளனா். அவ்வகையில், இந்த முன்னேற்றங்களுக்கு காரணமான அடிப்படை ஊழியா்களை பாராட்டுகிறோம். மின்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளால் விபத்துகள் தவிா்க்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசையும், முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், அதிகாரிகள் ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டுகிறோம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அரசு மருத்துவா்களுக்கு முதல்வா் பாராட்டு
அரசுக்கு மக்கள் பலமா, பாரமா?

அரசுக்கு மக்கள் பலமா, பாரமா?

மழைக்கால பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: எதிா்பாா்ப்பும் ஏமாற்றமும்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

