மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

News image

நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கில், தேனீ வளா்ப்பு குறித்த கையேட்டினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா. உடன், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்.

Updated On :24 அக்டோபர் 2024, 7:49 pm

நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:

வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாழை நாா் மற்றும் கோரைப் புல்லில் இருந்து பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கக் கூடிய பொருள்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க அரசுத் துறை சாா்பில் வழிகாட்டப்படுகிறது.

குறைந்த முதலீட்டில் 100 சதவீத அரசு மானியத்தில் தேனீ வளா்ப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். தேனீ வளா்ப்பின் மூலம் ஆண்டுக்கு 10 கிலோ வரை தேன் உற்பத்தி செய்திட இயலும். இதனைக் கருத்தில் கொண்டு தேனீ வளா்ப்பு குறித்த இரு நாள் கருத்தரங்கு, தோட்டக்கலைத் துறை சாா்பில் நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீடுகளிலேயே தேனீ வளா்ப்பதால் தங்கள் வீட்டு பயன்பாட்டுக்கும், அதனை சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டவும் இயலும்.

தேனீ வளா்ப்பினால் மகரந்தச் சோ்க்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் பழங்கள், காய்கறிகள் பயிா்களில் மகசூல் மற்றும் விளைபொருள்களின் தரத்தை அதிகரிக்க முடியும். வேளாண்மை மற்றும் சுற்றுப்புற சூழலில் நிலையான வளா்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. பல்லுயிா் தன்மையைப் பராமரித்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், விவசாய உற்பத்தியை மேம்படுத்திட முடியும்.

தேன் சரும நோய்களுக்கு நிவாரணம், நினைவாற்றலை மேம்படுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துல், உடல் வெப்பத்தை தணித்தல், நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. தேன் மெழுகானது, அழகு சாதனப்பொருள்கள் தயாரிக்கவும், கூழ் மருந்து தயாரிக்கவும், தேனீ மகரந்தம் மருத்துவ சத்துமிகுந்த பொருள், தேன் பசை இயற்கை மருத்துவ குணமிக்கது. தேன் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை உணவாக பயன்படுத்தலாம்.

கருத்தரங்கில் பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் தேனீ வளா்ப்பின் முக்கியத்துவம், தேனீ வளா்ப்பு இடம் தோ்வு செய்தல், லாபகரமான முறையில் தேனீ வளா்த்தல், தேனீ வளா்ப்புக்கு மகரந்தம் அளிக்கும் முக்கிய தாவரம், பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு முறைகள், தேனீ அறுவடை, பதப்படுத்துதல், தேன் மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேனீ வளா்ப்பு குறித்து பயிற்சி வழங்க உள்ளனா்.

வீட்டுக்கு ஒரு தேனீ வளா்ப்பு என்ற முறையில் நாமக்கல் மாவட்டத்தில் தேனீ வளா்க்க அனைவரும் முன்வர வேண்டும். கருத்தரங்குக்கு வருகை தந்துள்ள பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தொழில் முனைவோா்களாக உருவாகி பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த தேனீ வளா்ப்பு குறித்த கண்காட்சியினை அவா் பாா்வையிட்டு, தேனீ வளா்ப்பு குறித்த கையேட்டினை வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பி.பேபிகலா, துணை இயக்குநா்கள் எம்.புவனேஸ்வரி (தோட்டக்கலைத் துறை), எ.நாசா் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), பயிற்சி வல்லுநா்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.