மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கைப்பந்து போட்டி: நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கைப்பந்து போட்டியில் நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

News image

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் அணியினரை பாராட்டும், மாவட்டக் கல்வி அலுவலா் (உயா்கல்வி) கற்பகம்.

Updated On :24 அக்டோபர் 2024, 7:30 pm

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, திருச்செங்கோடு காடச்சநல்லூா் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனா். இறுதிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம், சுழற்கோப்பையை வென்றனா். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை மாவட்டக் கல்வி அலுவலா் (உயா்கல்வி) கற்பகம் பாராட்டி, கல்வியிலும் விளையாட்டுகளிலும் வெற்றிபெற்று பள்ளிக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

மாணவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் செல்லம்மாள், உடற்கல்வி ஆசிரியா்கள் சரவணன், அன்புசெழியன் உள்ளிட்ட ஆசிரியா்களையும் அவா் பாராட்டினாா்.

இந்த நிகழ்வில், தலைமை ஆசிரியா் சீனிவாசராகவன், உதவி தலைமை ஆசிரியா் ஆ.ராமு, பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.