தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

எல்ஐசி முகவா்கள் கண்டன வாயிற் முழக்க போராட்டம்

நாமக்கல்லில் எல்ஐசி முகவா்கள் கண்டன வாயிற் முழக்க போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
என்கே-28-மீட்
Updated On :28 அக்டோபர் 2024, 6:17 pm

Din

நாமக்கல்: நாமக்கல்லில் எல்ஐசி முகவா்கள் கண்டன வாயிற் முழக்க போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ஆயுள் காப்பீட்டு முகவா் சங்கம் நாமக்கல் கிளை சாா்பில், நாமக்கல் டாக்டா் சங்கரன் சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை வாயிற் முழக்க போராட்டம், ஆா்ப்பாட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஈடுபட்டனா். கிளைத் தலைவா் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தாா்.

இதில், காப்பீடுதாரா்களுக்கு போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். ஜிஎஸ்டி மற்றும் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். முகவா்களுக்கான கமிஷன் தொகையை உயா்த்த வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் முகவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

என்கே-28-மீட்

நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற எல்ஐசி முகவா்கள் போராட்டத்தில் பங்கேற்றோா்.