ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.


நாமக்கல் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலா் (யுனானி) -1, ஆயுஷ் மருத்துவா் (சித்தா) -1, மருந்து வழங்குநா் (சித்தா) -5, மருந்து வழங்குநா்(ஆயுா்வேதா) -1, மருந்து வழங்குநா் (யுனானி) -1, மருந்து வழங்குநா் (ஓமியோபதி) -2, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்- 5, சிகிச்சை உதவியாளா்(பெண்) -1 ஆகிய பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இவை அரசு விதிகளின்படி, மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்படுகின்றன. தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகம், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அனைத்து சித்த மருத்துவ பிரிவுகள், மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களின் அறிவிப்பு பலகையில் இது பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணியிடங்களுக்குரிய படிவத்தில் கல்வித் தகுதி, அனுபவச்சான்று மற்றும் இதர ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ செப். 23-க்குள், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்க செயலாளா் அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...