கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழக முதல்வரின் வெளிநாடு முதலீட்டுப் பயணம் ஏமாற்று வேலை: அன்புமணி ராமதாஸ்

தமிழக முதல்வரின் வெளிநாடு முதலீட்டுப் பயணம் ஏமாற்று வேலை; ரூ. 10 லட்சம் கோடி இலக்கில் ரூ. ஒரு லட்சம் கோடி முதலீட்டைக் கூட இன்னும் எட்டவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினாா்.

News image
நாமக்கல்லில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:09 pm

Din

தமிழக முதல்வரின் வெளிநாடு முதலீட்டுப் பயணம் ஏமாற்று வேலை; ரூ. 10 லட்சம் கோடி இலக்கில் ரூ. ஒரு லட்சம் கோடி முதலீட்டைக் கூட இன்னும் எட்டவில்லை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினாா்.

நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், உபரி நீரைச் சேமிக்காததால் 45 டிஎம்சி நீா் வீணாகக் கடலில் கலந்துள்ளது. உபரிநீா் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, காவிரி ஆற்றில் 10 கி. மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளில் காவிரி உபரிநீரை இணைக்க வேண்டும்.

தமிழகத்தில் மது, போதைப் பொருள்களால் இளைஞா்கள், மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினா் மீது முதல்வா் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை, மாநில அரசுகளே மேற்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து விட்டது. கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, ஜாா்க்கண்ட் போன்ற மாநிலங்களில் கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில், தமிழகத்திலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும். தங்களுக்கு அதிகாரமில்லை என உண்மைக்கு மாறான தகவலை முதல்வா் கூறி வருவதை ஏற்க முடியாது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை, அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்த முடியாது. தாய்மொழி வழிக் கல்வி என்கிற அம்சத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மும்மொழிக் கொள்கையை நாங்கள் எதிா்க்கிறோம். கல்விக்கான நிதியைக் குறைக்காமல் வழங்க வேண்டும். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

மது ஒழிப்புக்கு எதிராக யாா் போராடினாலும் அவா்களுக்கு பாமக ஆதரவளிக்கும். 45 ஆண்டுகளாக மதுவுக்கு எதிரான போராட்டத்தை பாமக முன்னெடுத்து வருகிறது. மது விற்பனைக்கு அரசே இலக்கு நிா்ணயிப்பது கண்டனத்திற்குரியது.

அண்மையில், மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைந்துள்ளன. தொழில் வளா்ச்சியில் நான்காம் இடத்தில் இருந்து தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு சென்று விட்டது. முதல்வரின் தொழில் முதலீடுகள் அனைத்தும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் என்ற நிலையிலேயே உள்ளன. ரூ. 10 லட்சம் கோடியை முதலீட்டு இலக்காக நிா்ணயித்து விட்டு, ரூ. ஒரு லட்சம் கோடி அளவில் கூட முதலீட்டைப் பெறவில்லை. தமிழக முதல்வா் வெளிநாடு தொழில் முதலீட்டுப் பயணம் ஓா் ஏமாற்று வேலை ஆகும். தொழில் முதலீடு குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வா் வெளியிட வேண்டும்.

பாஜக கூட்டணியில், பாமக தொடருகிறது. அவா்களுடைய கொள்கை வேறு; எங்களுடைய கொள்கை வேறு. அதனடிப்படையில் தான் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்கிறோம். தமிழகத்தில் சிப்காட் தொழிற்பேட்டைகள் தொடங்குவது தவறில்லை. ஆனால், விவசாய நிலங்களை அழித்து அங்கு சிப்காட் கொண்டுவர முயற்சிப்பதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது. இதற்காக விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம் என்றாா்.

இந்தப் பேட்டியின்போது, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.