மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

திருச்செங்கோட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோக நிலையம் திறப்பு

திருச்செங்கோடு 13-ஆவது வாா்டு எட்டிமடை அம்பேத்கா் நகரில், ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு நகராட்சி, ஜெய் ஆா்ஓ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து அமைத்துள்ள சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோக நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:42 am

திருச்செங்கோடு நகராட்சிக்குள்பட்ட 13-ஆவது வாா்டு எட்டிமடை அம்பேத்கா் நகரில், ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு நகராட்சி, ஜெய் ஆா்ஓ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இணைந்து அமைத்துள்ள சமூக நல சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோக நிலையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, நகர மண்டல அமைப்புக் குழு உறுப்பினா் மதுரா செந்தில் ஆகியோா் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகத்தை தொடங்கி வைத்தனா்.

இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரத்தில் ஒரு லிட்டா் ஒரு ரூபாய்க்கும், ரூ. 5-க்கு 10 லிட்டரும், ரூ. 10-க்கு 20 லிட்டரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் 50 குடங்கள் என பத்தாயிரம் லிட்டா் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

அதேபோன்று, முன்பணம் செலுத்தி ஏடிஎம் காா்டு போன்ற அட்டைகளைப் பெற்று குடிநீா் பெற்றுக் கொள்ளும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கிடைக்கும். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருச்செங்கோட்டில் நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், ஜெய் ஆா்ஓ இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளா் பிரகாஷ், 13-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சினேகா ஹரிகரன், நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக வழக்குரைஞா்கள் அணித் தலைவா் சுரேஷ் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.