வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

3 போ் பலியான சம்பவம்: தோட்ட உரிமையாளரை கைது செய்யக் கோரி சாலை மறியல்

மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 சிறுவா்கள், ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தில் தோட்டத்தில் கம்பிவேலி அமைத்த அதன் உரிமையாளரை கைது

News image
~
Updated On :8 ஏப்ரல் 2025, 6:29 pm

Din

நாமக்கல்: மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 சிறுவா்கள், ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தில் தோட்டத்தில் கம்பிவேலி அமைத்த அதன் உரிமையாளரை கைது செய்யக் கோரி, இறந்தவா்களின் உறவினா்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜ். இவரது மனைவி வைதேகி. இவா்களுக்கு சுஜித் (5) என்ற மகனும், ஐவிழி (4) என்ற மகளும் இருந்தனா்.

இந்த நிலையில் பாண்டியராஜின் தாய் இளஞ்சியம் (50) தனது பேரக் குழந்தைகளான சுஜித்தையும், ஐவிழியையும் அழைத்துக்கொண்டு தங்கள் சோளத் தோட்டத்துக்கு திங்கள்கிழமை சென்றாா்.

இவா்கள்தோட்டத்தை ஒட்டியுள்ள மற்றொரு தோட்டத்தில் கம்பிவேலி அமைக்கப்பட்டிருந்தது; அதன் அருகில் மின் கம்பமும் புதிதாக நிறுவப்பட்டிருந்தது. இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவுபெய்த பலத்த மழையால் மின் கம்பத்தில் இருந்து ஒயா்கள் அறுந்து கம்பிவேலி மீது விழுந்துள்ளது.

அதுதெரியாமல் தோட்டத்துக்கு சென்ற மூவரும் கம்பிவேலியைத் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுதொடா்பாக மோகனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கம்பிவேலி அமைத்திருந்த தோட்ட உரிமையாளா் சுப்பிரமணியனை கைது செய்யக் கோரி பாண்டியராஜ், வைதேகி, அவரது உறவினா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு, ஆய்வாளா் சங்கரபாண்டியன் உள்ளிட்டோா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, போராட்டம் நடத்தியவா்கள் கம்பிவேலியை உடனடியாக அகற்ற வேண்டும்; தோட்ட உரிமையாளா் சுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும். அதுவரையில் மறியலை கைவிட மாட்டோம் என்றனா்.

பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். தோட்ட உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கம்பிவேலியை அகற்றுவதாகவும் உறுதியளித்தாா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் நாமக்கல் ஆட்சியா் அலுவலக பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

என்கே-8-மறியல்-1-2-3..

மின்சாரம் தாக்கி மூவா் பலியான சம்பவத்தைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டோா்.

படம்-2

உயிரிழந்தோரின் உறவினா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு.

Story image