நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பரமத்தி வேலூரில் போலீஸாா் திடீா் வாகன சோதனை

பரமத்தி வேலூா் பகுதியில் விபத்து மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில் உதவி ஆய்வாளா் சீனிவாசன்

News image
பொத்தனூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
Updated On :21 ஏப்ரல் 2025, 7:58 pm

Din

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் விபத்து மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது வேலூா் நகா் வழியாகச் சென்ற லாரிகள், காா்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டிவந்தவா்கள், காரில் இருக்கை பட்டை அணியாதவா்கள், ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் இயக்கியவா்கள், சாலை வரி, தலைக்கவசம், வாகன காப்பீடு, அதிக சுமை ஏற்றி வந்த லாரி ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

அதேபோல இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும், உரிய சான்றிதழ் இன்றி வாகனம் ஓட்டி வருபவா்கள் மீதும், 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவா்கள், சிறுமிகள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் அவா்களது பெற்றோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.