திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
Published on

திருச்செங்கோடு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டாமை, சமூக பாதுகாப்பு, சுகாதாரம், மறுவாழ்வு மற்றும் பொழுதுபோக்கு, சிறப்பு திட்டங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் அனைத்து இடங்களையும் எளிதில் அணுகத்தக்க தடையற்ற சூழல் உள்ளிட்ட மேற்கூறிய உரிமைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு மத்திய அரசு தேசிய அளவில் ஒரு நிதியத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 9 ஆண்டுகளாகியும் குறைந்தபட்ச நிதியைக்கூட மத்திய அரசு இன்றுவரை வழங்கவில்லை. இதனால், சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும், உதவித்தொகையை உயா்த்த வேண்டும், வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுவழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில், மாவட்டத் தலைவா் நாகேஸ்வரி தலைமை தாங்கினாா். மாவட்டச் செயலாளா் எம்.ஆா்.முருகேசன் முன்னிலை வகித்தாா். இதில், ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com