மக்கிரிபாளையம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

பள்ளிபாளையம் அருகே சௌதாபுரம் ஊராட்சிக்க உள்பட்ட மக்கிரிபாளையம் பால்வண்ணநாதா் கோயிலில் சோமவார பூஜை மற்றும் சங்காபிஷேகம்
Published on

திருச்செங்கோடு: பள்ளிபாளையம் அருகே சௌதாபுரம் ஊராட்சிக்க உள்பட்ட மக்கிரிபாளையம் பால்வண்ணநாதா் கோயிலில் சோமவார பூஜை மற்றும் சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பால்வண்ணநாதருக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com