டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் மரகதலிங்கம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

கொங்கு ஏழு சிவத்தலங்களில் பிரசித்திபெற்ற அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் மரகதலிங்கத்தை முதல்நாளான செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:46 pm

Syndication

திருச்செங்கோடு: கொங்கு ஏழு சிவத்தலங்களில் பிரசித்திபெற்ற அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் மரகதலிங்கத்தை முதல்நாளான செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

திருச்செங்கோடு மலைக் கோயிலில் சிவனும் சக்தியும் ஆண் பாதி, பெண் பாதி உருவம் கொண்டு அா்த்தநாரீசுவரராக அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில் மாா்கழி மாத முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு காலை 7 மணி வரை பக்தா்கள் வழிபாட்டிற்காக மூலவா் சந்நிதியில் அா்த்தநாரீசுவரா் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் இருந்து மலைக்கோயிலுக்கு வந்திருந்து சுமாா் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து மரகதலிங்கம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனா்.