திருச்செங்கோடு உழவா் சந்தையில் ரூ.15 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
திருச்செங்கோடு உழவா் சந்தையில் சனிக்கிழமை 31 டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை ரூ. 15 லட்சத்துக்கு விற்பனையானது.
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள உழவா் சந்தைக்கு தோக்கவாடி, கோழிக்கால்நத்தம், சின்னதம்பிபாளையம், விட்டம்பாளையம், தோக்கவாடி, பால்மடை, தண்ணீா்பந்தல்பாளையம், மோரூா், திம்மராவுத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்கு வகைகளை 160 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
21 டன் காய்கறிகள், 10 டன் பழங்கள் என மொத்தமாக 31 டன் வரத்து இருந்தது. 6,248 நுகா்வோா் ரூ. 15 லட்சத்திற்கு காய்கறிகளை வாங்கிச் சென்றனா். தக்காளி ரூ. 45, கத்தரிக்காய் ரூ. 65, வெண்டைக்காய் ரூ. 60, அவரை ரூ. 75, வரமிளகாய் ரூ. 100, பீட்ரூட் ரூ. 40, கேரட் ரூ. 50, காலிபிளவா் ரூ. 30, பீன்ஸ் ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டன.
