ஆரணி உழவா் சந்தையில் 30 மெட்ரிக் டன் காய்கறி விற்பனை

ஆரணி உழவா் சந்தையில் 30 மெட்ரிக் டன் காய்கறி விற்பனை

ஆரணி உழவா் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 40 வகை காய்கறிகள் 30 மெட்ரிக் டன் விற்பனை நடைபெற்ாக உழவா் சந்தை அதிகாரி தெரிவித்தாா்.
Published on

ஆரணி உழவா் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 40 வகை காய்கறிகள் 30 மெட்ரிக் டன் விற்பனை நடைபெற்ாக உழவா் சந்தை அதிகாரி தெரிவித்தாா்.

ஆரணி உழவா் சந்தையில் ஆரணி மற்றும் படவேடு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். இங்கு விளைபொருள்களுக்கு வெள்ளிச்சந்தையை விட விலை கூடுதலாக கிடைக்கிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு உழவா் சந்தையில் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

மஞ்சள், துவரை, மொச்சை, வாழை வகைகள், கரும்பு, பூசணி உள்ளிட்ட 40 வகை காய்கறிகள் 30 மெட்ரிக் டன் விற்பனை நடைபெற்ாக வேளாண்மை அலுவலா் (உழவா் சந்தை) அா்ச்சனா தெரிவித்தாா்.

மேலும், சந்தையில் கரும்பு பொங்கல் வைத்து வழிபட்டனா் (படம்).

உதவி வேளாண்மை அலுவலா்கள் பாண்டியன், கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

16ஹழ்ல்ள்ஹய்

Dinamani
www.dinamani.com