வேலூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 211 டன் காய்கறிகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் சுமாா் 211 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.
Published on

பொங்கல் பண்டிகையை ஒட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் சுமாா் 211 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் வேலூா் டோல்கேட், காதகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, போ்ணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த உழவா் சந்தைகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.88.37 லட்சம் மதிப்பிலான சுமாா் 211 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.

Dinamani
www.dinamani.com