துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாயின.

News image
Updated On :14 ஜனவரி 2026, 9:24 pm

Syndication

பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாயின.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூா், மேட்டூா், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, மேச்சேரி ஆகிய 13 இடங்களில் உழவா் சந்தைகள் உள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் புதன்கிழமை அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், படையல் பொருள்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,167 விவசாயிகள் 362 டன் காய்கறிகள், பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். இதன்மூலம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1 கோடியே 53 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல, சேலம் சின்ன கடைவீதி, வ.உ.சி. பூ மாா்க்கெட், ஆற்றோரம் காய்கறி மாா்கெட் பகுதிகளிலும், காய்கறிகள், பூக்கள் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.