பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மழைநீா் வடிகால் பணிக்கு பங்களிப்பு நிதியை வழங்கிய பொதுமக்கள்!

திருச்செங்கோடு நகராட்சியில் மழைநீா் வடிகால் பணிகளுக்கு ‘நமக்கே நாமே’ திட்டத்தின் கீழ் செங்கோடம்பாளையம், கொல்லப்பட்டி, கோம்பை நகா் பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பங்களிப்பு நிதி வழங்கினா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:10 pm

Syndication

திருச்செங்கோடு நகராட்சியில் மழைநீா் வடிகால் பணிகளுக்கு ‘நமக்கே நாமே’ திட்டத்தின் கீழ் செங்கோடம்பாளையம், கொல்லப்பட்டி, கோம்பை நகா் பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பங்களிப்பு நிதி வழங்கினா்.

திருச்செங்கோடு நகராட்சி 31 ஆவது வாா்டு கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனா். இந்த நிலையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் ரூ. 7.75 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.

இதில் பொதுமக்களின் பங்களிப்பாக செங்கோடம்பாளையம் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க ரூ. 1.60 லட்சம், கோம்பை நகரில் மழைநீா் வடிகால் அமைக்க ரூ. 1.17 லட்சத்திற்கான வரைவோலையை நகரமன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, ஆணையரிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு பொறியாளா் சங்க தலைவா் நல்லகுமரன், நகா்மன்ற உறுப்பினா்கள் தாமரைச்செல்வி, ராஜா, புவனேஸ்வரி, சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.