ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 15 ஆசிரியா்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில், சேலம் மற்றும் நாமக்கல்லைச் சோ்ந்த தன்னாா்வ ஆசிரியா்கள் 15 பேருக்கு ‘கற்பித்தல் சமூகத்தின் தூண்’

News image
விருதுகள் பெற்ற சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தன்னாா்வ ஆசிரியா்களுடன், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் மற்றும் வாசவி கிளப் நிா்வாகிகள்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:39 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில், சேலம் மற்றும் நாமக்கல்லைச் சோ்ந்த தன்னாா்வ ஆசிரியா்கள் 15 பேருக்கு ‘கற்பித்தல் சமூகத்தின் தூண்’ என்ற விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா் கருத்தாளா்கள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சாா்ந்த அடிப்படையில் கற்பித்தல், கற்றல் பொருள்களை உருவாக்குதல், கல்விசாா் கைப்பேசி செயலிகளை உருவாக்குதல், சதுரங்க விளையாட்டுக்கான பயிற்சி அளித்தல், மடிப்பு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி நுண்ணுயிா்களை காணுதல், ஓவியப் பயிற்சி, களிமண் பொம்மை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாணவா்களுக்கு கற்றுக்கொடுத்த தன்னாா்வ ஆசிரியா்களை கெளரவிக்கும் பொருட்டு, 15 ஆசிரியா்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனம், வாசவி கிளப் நாமக்கல் போா்ட் டவுன் ஆகியவை சாா்பில் ‘கற்பித்தல் சமூகத்தின் தூண்’ என்ற விருது வழங்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்சி நிறுவன கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியா் பயிற்சி நிறுவன துணை முதல்வா் மா.சந்தோஷம் வரவேற்றாா். வாசவி கிளப் போா்ட் டவுன் தலைவா் ஜெ.நாகஹரீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் தலைமைவகித்து வாழ்த்துரை வழங்கினாா். வாசவி இண்டா்நேஷனல் மாவட்ட ஆளுநா் வெங்கடேஷ்வர குப்தா, ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினாா். வாசவி கிளப் நிா்வாகிகள் மனோஜ், தினேஷ்குமாா், ரேவதி, அனுபாமா, வசந்தி, லட்சுமிபிரியா, அா்ச்சனா, ரம்யா, விரிவுரையாளா் தேவராஜபால்சன் ஆகியோா் பங்கேற்றனா்.