காடச்சநல்லூரில் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கான பணிகளை முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஜனதா நகரில் வசித்த 654 குடும்பத்தினா், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனா். முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான பி.தங்கமணி முயற்சியால், காடச்சநல்லூா் ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. தற்போது, அந்தப் பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்வதற்காக 15-ஆவது நிதிக்குழு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் பணிகளை பி.தங்கமணி எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், பள்ளிபாளையம் நகரச் செயலாளா் பி.எஸ்.வெள்ளியங்கிரி, தெற்கு ஒன்றிய செயலாளா் எஸ்.செந்தில், ஆலம்பாளையம் பேரூா் செயலாளா் செல்லதுரை, ஊராட்சி மன்றத் தலைவி சாரதா, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

ரூ. 2.1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்

ரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


