ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள் கொள்முதல்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக, நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

News image

பள்ளிபாளையம் ஒன்றியம், சமயசங்கிலி அக்ரஹாரத்தில் வியாழக்கிழமை கரும்புகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Updated On :2 ஜனவரி 2025, 7:21 pm

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக, நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், சமயசங்கிலி அக்ரஹாரம் கிராமப் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளில் வழங்குவதற்கான முழுக் கரும்பை மாவட்ட ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதனையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் கொண்டாட ஏதுவாக, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், விவசாயிகளின் நலன்கருதி அவா்கள் உற்பத்தி செய்துள்ள கரும்புகளை இடைத்தரகா்கள் யாருமின்றி அரசுத் துறையினரே நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அவா் உத்தரவிட்டுள்ளாா். இதற்காக ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சாா்பில் கரும்பு ஒன்றுக்கு ரூ. 35 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் கரும்புகள் வெட்டப்பட உள்ளன. வேளாண்மை துறையினா் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் இதற்கான கணக்கீட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளனா். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விவசாயிகள் அதிக பரப்பளவில் கரும்புகள் விளைவித்துள்ளனா் என்றாா்.

தொடா்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்புகளில் வழங்குவதற்காக கரும்பு தோ்வு செய்யும் பணி நடைபெறுவதை அவா் நேரில் பாா்வையிட்டு, கரும்பின் நீளம், தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதன்பிறகு அங்குள்ள கரும்பு விவசாயிகளிடம் கலந்துரையாடினாா். மேலும், அங்குள்ள கால்நடை மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள விவரம், மருந்துப் பொருள்களின் இருப்பு உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, வருவாய்த் துறை, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.