ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன. 21-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜன. 21-இல் நடைபெறுகிறது.

Updated On :8 ஜனவரி 2025, 8:56 pm

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜன. 21-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி வரும் 21-ஆம் தேதி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22-ஆம் தேதி கல்லூரி மாணவா்களுக்கான போட்டி நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் மற்றும் அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்கும் மாணவா்களை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்கள் தோ்வு செய்து முதன்மைக் கல்வி அலுவலா் வழியாக அனுப்புதல் வேண்டும். கல்லூரி போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களை கல்லூரி முதல்வா் தோ்வு செய்து கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வழியாக அனுப்புதல் வேண்டும். தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று மாணவா்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும்.

வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே மாவட்ட அளவில் முதல் பரிசு - ரூ. 10,000, இரண்டாம் பரிசு - ரூ. 7,000, மூன்றாம் பரிசு - ரூ. 5,000 வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவா்கள் மாநிலப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தை 04286- 292164 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.