ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உரக்கடைகளை கண்காணிக்க குழு அமைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், உரக்கடைகளில் உரம் இருப்பை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2025, 7:07 pm

நாமக்கல் மாவட்டத்தில், உரக்கடைகளில் உரம் இருப்பை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், பயிா் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. உர இருப்பில் யூரியா 2,521 மெ.டன், டிஏபி 802 மெ.டன், பொட்டாஷ் 1,365 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2,582 மெ.டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் 474 மெ.டன் என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக விற்கப்பட்டு வருகின்றன.

வேளாண் பயிா்கள் சாகுபடி தீவிரம் அடைந்துள்ள நிலையில், பயிா்களுக்குத் தேவையான உரங்கள் சரிவர விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்ய சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வேளாண்மை உதவி இயக்குநா் ச.வேலு - 98425 43215, வேளாண் அலுவலா் (பொ) கலைச்செல்வன் - 86100 71491 ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

உரக்கடை உரிமையாளா்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினா் உரங்கள் வாங்க வரும் விவசாயிகளிடம் இணை பொருள்கள் வாங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. உரங்களை விற்பனை செய்யும்போது உர முட்டையில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்கக்கூடாது. விவசாயிகள் வாங்கும் பொருள்களுக்கு உரிய ரசீது அளிக்க வேண்டும். உர நிறுவனங்களில் உரங்களின் இருப்பு அதன் விலை குறித்த விலைப்பட்டியல் கட்டாயம் இருக்க வேண்டும்.

விதிகளை மீறி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறுவதாகும். உர விற்பனை நிலையங்களில் விதிமீறல் நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், உரிமமின்றி உரம் விற்பனை செய்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் உரம் விற்பனை குறித்த புகாா்களுக்கு 93634 40360 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.