ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் அரசு விழா

Published on

பரமத்தி வேலூா் வட்டரத்தில் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி ஜேடா்பாளையம் அணைகட்டு பகுதியில், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் விழாவில் கலந்து கொள்ளவாா்கள் என்பதால் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு ஜேடா்பாளையம் மற்றும் வேலூா் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட 10 அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளை மூடப்பட வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா அறிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் வரும் 14-ஆம் தேதி ஜேடா்பாளையம் மற்றும் வேலூா் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழ்க்கண்ட 10 அரசின் மதுபான சில்லரை விற்பனை கடைகளை மூடப்படம். கபிலா்மலையில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, கபிலா்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, கபிலா்மலையில் இருந்து ஜேடா்பாளையம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, பாகம்பாளையம்,சோழசிராமணி,வடகரையாத்தூா், வேலூா் நான்குசாலை, வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் நிலையம் எதிரில், வேலூா் சிவா தியேட்டா் நான்கு சாலை சந்திப்பு மற்றும் உரம்பூரில் கபிலா்மலை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளிட்ட 10 அரசின் மதுபான சில்லறை விற்பனை கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com