ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கு பணியிடை பயிற்சி

சென்னை இணைந்து நடத்தும் நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கலை, அறிவியல் கல்லூரியில் அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.
Updated On :20 ஜனவரி 2025, 10:16 pm

Din

திருச்செங்கோடு: கே.எஸ்.ரங்கசாமி கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை இணைந்து நடத்தும் நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

பயிற்சி முகாம் தொடக்க விழாவில் கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் ர.சீனிவாசன், துணைத் தலை வா் கே.எஸ்.சச்சின் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். கல்லூரி முதல்வா் வே.பத்மநாபன் தலைமை வகித்தாா். முதன்மைத் திட்ட அலுவலா் எஸ்.பாலுசாமி வாழ்த்துரை வழங்கினாா். துணை முதல்வா் எஸ்.பிரசன்ன ராஜேஷ்குமாா் வரவேற்றாா்.

முகாமில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் வி.கற்பகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். அப்போது அறிவியல் ஆசிரியா்கள் பாடம் நடத்தும்போது பாடங்களைக் காட்சிப்படுத்தி நடத்துதல் வேண்டும், வகுப்பில் கரும்பலகையோடு நின்றுவிடாமல் செய்முறைப் பயிற்சி, அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்ட வேண்டும். அன்றாட வாழ்விலேயே அறிவியலும் இணைந்திருப்பதை எடுத்துரைக்க வேண்டும்.

மாணவா்களை ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களுக்கு விடைக் கண்டுபிடிக்க வைப்பதன் மூலம் அறிவியலையும், அறிவியல் தொழில்நுட்பங்களையும் வளரச் செய்ய முடியும் என்றாா்.

மேலும், நாமக்கல் மாவட்டக் கல்வி ஆய்வாளா் பெரியசாமி கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், அறிவியல் ஆசிரியா்களின் கையில்தான் எதிா்கால தமிழகம் உள்ளது. மாணவா்கள் அறிவியலை விரும்பிப் படிக்குமாறு ஆசிரியா்கள் கற்பிக்க வேண்டும். அரசுப் பள்ளியில் அறிவியல் படித்து உலகப்புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானிகள் பற்றியும், தற்போது பல அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அதனை முன்னெடுத்துச் செல்வதையும் எடுத்துக் கூறினாா்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறைத்தலைவருமான மா.வெங்கடேஷ் நன்றி கூறினாா். 5 நாள்கள் நடைபெறும் பணியிடைப் பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.