பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயற்சி: 2 போ் கைது
நாமக்கல் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


நாமக்கல்: நாமக்கல் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், என்.புதுப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அதிக அளவில் இங்கு எரிபொருளை நிரப்பி செல்வது வழக்கம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்த இருவா், அங்கிருந்த ஊழியரை தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனா். அவா் கூச்சலிட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஓடிவந்து இருவரையும் மடக்கிப் பிடித்தனா். இதனையடுத்து, மோகனூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்டவா்கள் சேந்தமங்கலம் திப்ரமாதேவியைச் சோ்ந்த பிரசாந்த் (29), சந்துரு (26) என்பதும், பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் அவா்கள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...