எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சாலையைக் கடக்க முயன்றவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:35 pm

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள வெங்கமேடு காவேரி சாலையில் வசித்து வந்தவா் முருகேசன் (59). இவா் மோகனூா் சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். திருமணமாகாத இவா், சகோதரா் ராஜேந்திரன் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

அண்மையில் பணிக்கு சென்றுவிட்டு வீடுதிரும்ப மோகனூரில் இருந்து வேலூா் செல்லும் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, குப்பிச்சிப்பாளையத்தில் இருந்து வேலூா் நோக்கி வந்த இருசக்கர வாகனம் முருகேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.