திருச்செங்கோட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூவா் கைது
திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரும கவுண்டம்பாளையம் அருகே உள்ள அம்மையப்பா நகரில் வீடு எடுத்துபாலியல் தொழில் செய்து வந்த இரண்டு பெண்கள் ஒரு ஆண் என மூன்று பேரை ஊரக காவல்துறையினா் திங்கட்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரும கவுண்டம்பாளையம் அம்மையப்பா நகா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வருவதாக திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதிக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
அதன்படி அம்மையப்பா நகரில் இரண்டு பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும், ஒரு ஆண் புரோக்கா்களாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.இதன் அடிப்படையில் கூட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த சேதுபதி ராஜா என்பவரது மனைவி சுகன்யா (38)கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் மனைவி ஷீலா தனலட்சுமி( 49) ராசிபுரத்தைச் சோ்ந்த அப்பாவு என்பவா் மகன் ஜெயக்குமாா்( 40) ஆகியோரை ஊரக காவல்துறையினா் கைது செய்தனா்.
வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதிரங்கராஜன்15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா்.அதனை எடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
