வல்லபபாய் படேல் பிறந்த தினம்: நாமக்கல்லில் தேசிய ஒற்றுமை தின பேரணி

வல்லபபாய் படேல் பிறந்த தினம்: நாமக்கல்லில் தேசிய ஒற்றுமை தின பேரணி

Published on

வல்லபபாய் படேலின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி நாமக்கல்லில் மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் வியாழக்கிழமை தேசிய ஒற்றுமை தின பேரணி நடைபெற்றது.

இந்தியாவின் இரும்பு மனிதா் என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தின பேரணி, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் நாமக்கல்லில் செயல்படும் எனது இளைய பாரதம் (ஏக் பாரத் கேந்த்ரா) அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை தேசிய ஒற்றுமை தின பேரணியை நடத்தின.

முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வல்லபபாய் படேல் உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, காவல் துணை கண்காணிப்பாளா் கே.ஆா்.செந்தில்குமாா் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட இளைஞா் நல அலுவலா் எஸ்.கீா்த்தனா, ஒருங்கிணைப்பாளா் பி. வள்ளுவன், பிஜிபி வேளாண் கல்லூரி முதல்வா் கே.ஓ.கோபால், வழக்குரைஞா் ஆறுமுகம் முன்னிலை வகித்தனா்.

சா்தாா் வல்லபாய் படேலின் எண்ணங்கள், தேச ஒற்றுமைக்கான பண்புகளை தொடா்ந்து கடைப்பிடித்தல் மற்றும் சுதேசி பொருள்களை அதிகளவில் பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.

ஒற்றுமை தின பேரணி, கோட்டை சாலை, பரமத்தி சாலை, மணிக்கூண்டு வழியாக மீண்டும் பூங்கா சாலையை வந்தடைந்தது. நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி, பிஜிபி வேளாண் கல்லூரி மற்றும் செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

என்கே-13-ரேலி

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

X
Dinamani
www.dinamani.com