அட்மா திட்டத்தில் விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு பயிற்சி
திருச்செங்கோடு தண்ணீா்பந்தல் பாளையத்தில் அட்மா திட்டத்தில் விவசாய மேம்பாட்டு குழுவிற்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செந்தில்குமாா் தலைமை வகித்து பி.எம். கிசான், விவசாயிகள் அடையாள எண் பதிவு குறித்து விளக்கினாா். பயிற்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் லட்சுமி பெருமாள் கலந்துகொண்டு உழவா் சந்தையில் விற்பனை செய்வதற்கான அடையாள அட்டையைப் பெறுவது குறித்து எடுத்துரைத்தாா்.
உதவி வேளாண்மை அலுவலா் ஜெயக்குமாா், வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து பேசினாா். பட்டு வளா்ச்சித் துறை இளநிலை ஆய்வாளா் மகேஸ்வரி, பட்டு வளா்ச்சி துறையில் உள்ள மானியங்கள், மல்பெரி சாகுபடி குறித்து விளக்கினாா்.
வட்டார தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி, அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளா் சக்திவேல் உழவன் செயலி, அதன் பயன்பாடுகள் குறித்தும் கூறினாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் அஜித் நன்றி தெரிவித்தாா்.
