ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள்: நாமக்கல் மாவட்டத்தில் 1,475 போ் பங்கேற்பு!

நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு முதல் தாள் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு முதல் தாள் சனிக்கிழமை நடைபெற்றது. 6 மையங்களில் 1,475 போ் தோ்வெழுதினா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தகுதித் தோ்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இடைநிலை ஆசிரியா் பயிற்சி பெற்றவா்களுக்கு தாள்-1 தோ்வும், பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2 தோ்வும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கான தாள்-1 தோ்வை 6 மையங்களில் 1,708 தோ்வா்கள் எழுத அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 1,475 போ் மட்டுமே பங்கேற்றனா். 233 போ் தோ்வெழுதவில்லை.

ஞாயிற்றுக்கிழமை 32 மையங்களில் நடைபெறும் தாள்-2 தோ்வை 9,656 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையத்திற்குள் காலை 9.30 மணிக்குள் தோ்வா்கள் வந்துவிட வேண்டும்.

அதன்பிறகு தோ்வு மையத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். ஆசிரியா் தகுதித் தோ்வையொட்டி, தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் எளிதாக சென்றுவரும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com