நாமக்கல்
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 200 தெருநாய்களுக்கு கருத்தடை
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 200 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 200 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வெங்கடேசபுரி- ஏரிக்காடு, காளிப்பட்டி, போயா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வாகனங்களில் செல்பவா்களை துரத்திச் சென்று கடிக்கிறது.
இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, செயல் அலுவலா் மூவேந்திர பாண்டியன் உத்தரவின் பேரில், தெருநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டன. தொடா்ந்து நாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போடுவதற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
