நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற நில அளவையா்கள்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற நில அளவையா்கள்.

நில அளவையா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற நில அளவையா்கள்.
Published on

நாமக்கல்லில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நில அளவையா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நில அளவையா்கள் ஒன்றிணைப்பு மாவட்ட மையம் சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், நில அளவைத் துறையில் களப் பணியாளா்களின் பணிச்சுமையைக் குறைத்து, பணிகளை முறைப்படுத்த வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவிகளை மீண்டும் முறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்துசெய்து, காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். காலியாக உள்ள நில அளவா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வட்டம், குறுவட்டம், நகர சாா் ஆய்வாளா், ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், நில அளவையா்கள் பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com